பல மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் யாழில் மூவர் கைது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்திவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற 29 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றுடன் சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டிருப்பதுடன், அவர்கள் கடத்தலுக்குப் பயன்படுத்திய மீன்பிடிப் படகும் இலங்கை கடற்படையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை யாழ்ப்பாணம் – கோவிலம் கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பூநகரி மற்றும் கரச்சி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleயாழ் அரியாலையில் 4 அதிரடிப்படையினரை அடித்து காயப்படுத்திய மணல் கள்ளர்கள்!
Next articleகிளிநொச்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றும்!