கிளிநொச்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றும்!

கிளிநொச்சியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை, 2ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் குறித்த தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் கிளிநொச்சி இராணுவ வைத்தியசாலை மருத்துவ குழுவினர், குறித்த தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தில் இணைந்துக்கொண்டிருந்தனர்.

இதில் பெரும்பாலான மக்கள் கலந்துகொண்டு தங்களுக்கான தடுப்பூசியினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Previous articleபல மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் யாழில் மூவர் கைது
Next articleஅடுத்த நான்கு மாதங்களுக்கு உரப் பற்றாக்குறை இருக்காது!