நாட்டில் பெற்றோல் பற்றாக்குறையா?

எதிர்காலத்தில் நாட்டில் பெற்றோல் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என ஊடகங்கள் சிலவற்றில் வெளியான செய்தி ஆதாரமற்றது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்றைய நிலவரப்படி 30 நாட்களுக்கு போதுமான அளவு பெற்றோல் இருப்பு நாட்டில் உள்ளதாக அமைச்சர் ஒரு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், 35,000 மெட்ரிக் தொன் பெற்றோலுடன் கப்பல் ஒன்று இன்னும் 13 நாட்களில் (ஜூலை 19) இலங்கைக்கு வர உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Previous articleமகனின் படு கொலைக்கு நீதிகேட்டு கதறும் தாய்
Next articleநாட்டில் மேலும் 650 பேருக்கு கொவிட்!