கனடா ஸ்கார்பாரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியான யாழ் இளைஞன்!

கனடா ஸ்கார்பாரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட 23 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:30 மணிக்குப் பின்னர் விபத்து நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

Acura வாகனத்தின் ஓட்டுநர் கிங்ஸ்டன் சாலையில் மேற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது அவர் ஷெப்பார்ட் அவென்யூ கிழக்கு மற்றும் போர்ட் யூனியன் சாலையில் சந்திக்கும் இடத்தில் வடக்கு நோக்கி சென்ற TTC பேருந்து மீது மோதினார்.

இந்த விபத்தில் அஸ்வின் சந்திரராஜ் என்ற 23 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த்தாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். அத்துடன் அவர் சிவப்பு ஒளி சமிக்ஞை விளக்கை மீறி வாகனத்தை செலுத்தி சென்று விபத்தில் சிக்கியதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் இந்த விபத்து நடந்த போது, TTC பேருந்தில் பயணிகள் இருக்கவில்லை என்றும், 61 வயதான சாரதி சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   

Previous articleதண்ணீர் குடித்துவிட்டு படுத்துறங்கிய 5 பிள்ளைகளின் தயார் மரணம் – யாழில் சோகம்
Next article45 வயதைத் தாண்டி பட்டதாரிகள் மீது இந்த அரசு எவ்வித கவனமும் கொள்ளவில்லை!