சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கி நாணய குற்றிகளை வெளியீட்டுள்ளது.
மேலும் இலங்கை மத்திய வங்கி ஆளுநரினால், இந்த நாணயக் குற்றி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு , சீன இலங்கை நாடுகளின் 65 ஆண்டு கால உறவை வலுப்படுத்தும் வகையிலும் இந்த நாணயக் குற்றி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் “இலங்கை – சீனா 65 ஆண்டுகள்” என நாணயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு நாணயத்தின் மறுபக்கத்தில் 1,000 ரூபாய் மற்றும் “சீன கம்யூனிஸ்ட் கட்சி” என மும்மொழிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 500 தங்க நாணயங்களும் 2000 வெள்ளி நாணயங்களும் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அத்தோடு வெளிநாடொன்றில் செயற்படும் கட்சி ஒன்றுக்காக நாடொன்று நாணயக் குற்றியை வெளியிடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.