கனடாவில் மின்னல் தாக்குதலால் 135க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ!

கனடாவில் மின்னல் தாக்குதலால் 135க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் மேற்கு ஆல்பர்ட்டாவில் ஜூன் 30 மற்றும் ஜுலை ஒன்றாம் தேதிகளில் மொத்தம் 7 லட்சத்து 10,000 மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

இதனால் அங்குள்ள வனப்பகுதிகள் பற்றி எரிந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் வார இறுதிக்குள் ஒரு லட்சம் ஹெக்டர் பகுதிகளை காட்டுத்தீ அழிக்கக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக , வனத்தை சுற்றிவசித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்பை விட்டு வெளியேறியுள்ளனர்.

Previous articleபூர்வகுடி மாணவர்களின் எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு பிரதமர் ட்ரூடோ விஜயம்!
Next articleஅந்தரங்கப் பகுதியில் அரிப்போ எரிச்சலோ ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?