மட்டக்களப்பில் முதியவரை மோதிக்கொன்ற சிறைச்சாலைகள் பேருந்து !

​மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி கறுவாக்கேணி சந்தியில் சிறைச்சாலை கைதிகளை ஏற்றிச் சென்ற இருபஸ் வண்டிகள் துவிச்சக்கரவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 60 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய தில்லைநாயகம் இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


பொலநறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி இரு சிறைக் கைதிகளை ஏற்றிக்கொண்டு இரு பஸ்வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக சம்பவதினமான இன்று மாலை 4 மணியளவில் பயணித்தபோது வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கறுவாக்கேணி சந்தி பகுதியில் துவிச்சக்கரவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளளார்.

அதில் சிறைச்சாலை பஸ் சாரதியை கைது செய்துள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleபாலைப்பழம் பறித்தவர்களை விரட்டியடித்த வனவளத்துறையினர்!! பூநகரியில் அநியாயம்!!
Next articleகோபுரத்தின் மீதேறி போராடடத்தில் ஈடுப்பட்ட பொறியியலாளர் சங்கத்தினர்