பாலியல் தேவைகளுக்காக சிறுவர்களை விற்பனை செய்யும் இணையத்தளங்கள் அடையாளம்!

பெண்கள் மற்றும் சிறுவர்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக இணையத்தளம் மூலம் விற்பனை செய்யும் மேலும் நான்கு இணையத்தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அத்தோடு 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைகளுக்காக இணையத்தளம் மூலம் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தற்போதுவரையில் நான்கு இணையத்தளங்கள் தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

எனினும் இந்நிலையில், இதுபோன்று செயற்படும் இணையத்தளங்களை கண்டறிவதற்கான விசாரணைகளை மேற்கொள்ள பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Previous articleநாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!
Next articleஇராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளே வழங்கப்படுகின்றன