ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது

மட்டக்களப்பில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரால், இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இராஜாங்க அமைச்சரின் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தார்.

அவரது மரணத்துக்கு நீதி வேண்டி, இன்றைய தினம் அவரது பெற்றோர்கள் உள்ளிட்ட பொதுமக்கள், மட்டக்களப்பு – காந்திபூங்காவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்வதற்கு முயற்சித்தனர்.

இதன்போது அங்கு வருகை தந்த பொலிஸார், தனிமைப்படுத்தல் சட்டத்தின் படி ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்,து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வருகை தந்திருந்த பஸ் உட்பட உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய 16 வயது யுவதி ஒருவர் தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில்!
Next articleகாணாமல் போன நெடுந்தீவு மீனவரின் சடலம் தமிழகத்தில் மீட்பு!