காணாமல் போன நெடுந்தீவு மீனவரின் சடலம் தமிழகத்தில் மீட்பு!

ஒரு வாரமாக காணாமற்போன நெடுந்தீவு மீனவர், தமிழகம் வேதாரணியம் கடற்கரையில் இன்று புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று தமிழக செய்திகள் தெரிவித்தன.

நெடுந்தீவு 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சில்வஸ்டார் மரியதாஸ் என்ற மீனவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த முதலாம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணியளவில் நெடுந்தீவு கடற்கரையிலிருந்து கட்டுமரம் ஒன்றில் அவர் தொழிலுக்குச் சென்றுள்ளார்.

எனினும் அவர் கடந்த ஒருவாரமாக கரை திரும்பவில்லை என்று குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அவரது சடலம், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் காவல்சரகம் கோடிக்கரை கடற்கரையில் கீச்சான் ஓடை அருகே கரை ஒதுங்கியுள்ள நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவித்தன.

இதேவேளை, அவர் அணிந்திருந்த ஆடைகளில் Sri Lanka என்ற எழுத்தும் இலங்கை நாட்டை சேர்ந்த ஸ்ம்பில் அச்சிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது
Next articleயாழ். மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பில் மாவட்ட செயலர் விளக்கம்