கொழும்பு பூர்வாராம ரயில் கடவையில் ரயிலுடன் கார் மோதியதில் இரு பெண்கள் படுகாயம்!

கொழும்பு − கிருலபனை − பூர்வாராம ரயில் கடவையில், நேற்று மாலை கார் ஒன்றுடன் ரயில் மோதுண்டதில் இரு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த இரு பெண்களும் சிகிச்சைகளுக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுகேகொடை ரயில் நிலையத்திலிருந்து உரிய சமிக்ஞை கிடைக்காத நிலையில், பாதுகாப்பு கடவை மூடப்படவில்லை என ரயில் கடவை பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

கொள்ளுபிட்டி பகுதியிலுள்ள வேலைத்தளத்திலிருந்து மஹரகம பகுதியிலுள்ள தமது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போதே, இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து பாதுக்கைக்கு சென்ற ரயிலே காருடன் மோதியுள்ளது. சுமார் 8 அடி தூரத்திற்கு கார் இழுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் கிருலபனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

Previous articleநார்த்தம் இலையின் அற்புத நன்மைகள்!
Next articleகேப்பாபிலவு மாதிரி கிராமத்தில் வசிக்கும் 65 குடும்பங்கள் வரட்சியினால் பாதிப்பு!