யாழ்.மாநகரில் பழக்கடை வியாபாரி மீது கூரிய ஆயுதத்தினால் தாக்குதல்!

யாழ்.மாநகரில் பழக்கடை வியாபாரி ஒருவர் கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 28 வயதான வியாபாரி ஒருவரே காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காசுக் கொடுக்கல் வாங்கல் காரணமாக இந்த மோதல் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாகப் பொலிஸார் கூறினர்.

Advertisement

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.