சூம் தொழில்நுட்பத்தில் கற்கை நடவடிக்கை – மாணவிகளுடன் மோசமாக செயற்பட்ட இளைஞன்

மாத்தறையில் சூம் தொழில்நுட்பத்திற்காக பெக்கேஜ் ஒன்று வழங்குவதாக கூறி பாடசாலை மாணவிகளின் கையடக்க தொலைபேசி இலக்கங்களை பெற்று மோசமாக செயற்பட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான இளைஞன் மாத்தறை குற்ற விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இணையத்தளம் ஊடாக மாணவிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அதிபர்> மாத்தறை குற்ற விசாரணை பிரிவிடம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தமுத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய நபர் எனவும் அவர் பிரதான தரப்பு தொலைபேசி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தேக நபர் கையடக்க தொலைபேசி ஊடாக மாணவிகளின் புகைப்படங்கள் பெற்றுக் கொண்டு அவர்களை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் இன்று மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleநிதியமைச்சர் ஆனார் பசில்!
Next articleகிளிநொச்சியில் பிறந்து 5 மாதங்களான குழந்தை திடீர் மரணம்!