கிளிநொச்சியில் பிறந்து 5 மாதங்களான குழந்தை திடீர் மரணம்!

கிளிநொச்சியில் பிறந்து 5 மாதங்களான குழந்தை திடீர் சுகயீனமடைந்த நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் கண்டாவளை – உழவனுார் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

திடீர் சுகயீனம் காரணமாக தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த குழந்தை, மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

​இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், பீ.சி.ஆர் பரிசோதனையும் நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது

Previous articleசூம் தொழில்நுட்பத்தில் கற்கை நடவடிக்கை – மாணவிகளுடன் மோசமாக செயற்பட்ட இளைஞன்
Next articleயாழ் சாவகச்சேரியில் ஆசிரியைவீட்டுக்குள் ஆயுத முனையில் கொள்ளை!