தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த குடும்பத் தலைவருக்கு வாள்வெட்டு

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட முகமாலை பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த குடும்பத்தலைவரை வெட்டியுள்ளது. இதனால் கை கால் மற்றும் முதுகு பகுதியில் அவர் பலத்த காயமடைந்துள்ளார்.

அத்துடன் வீட்டில் வாய் பேச முடியாத நிலையில் இருந்த நபருக்கும் அடிகாயங்கள் ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்த தொலைக்காட்சி அலுமாரி உள்ளிட்ட பொருட்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீட்டின் பிரதான வாயிலில் காணப்பட்ட கதவும் வாளினால் வெட்டப்பட்டுள்ளது

காயமடைந்த குடும்பத்தலைவர் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக விரைந்து செயற்பட்ட முகமாலை இராணுவத்தினர், மற்றும் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை அவதானித்தனர்.

Previous articleஅமைச்சராக பதவியேற்கமுன் பசில் வெளியிட்ட அறிக்கை
Next articleஆர்ப்பாட்டக்காரரரை குண்டுக்கட்டாக துாக்கிச் செல்லும் சிறிலங்கா காவல்துறை!