கங்கை நதியில் கொரோனா வைரஸின் தடையங்கள் கிடைக்கவில்லை – ஆய்வில் தகவல்!

கங்கை நதியில் கொரோனா வைரஸின் எந்த தடயங்களும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என அரசு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரின் சில மாவட்டங்களை ஒட்டி, கங்கை நதியில் சில சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

குறித்த சடலங்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து கங்கை நதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில் மேற்படி முடிவு வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.