ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் வரை கடன்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி ஏற்பட்டதிலிருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன் ஆசிரியர்களுக்கு 14 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் 6 லட்சம் முதல் 14 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்த கடன் பணம் மூலம் திருமணம், பைக், கார் வாங்குவது உள்ளிட்ட செலவுகளை செய்து கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு மிகக் குறைந்த வட்டி தான் அவர்களிடம் இருந்து பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய அறிவிப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Previous articleஎன்னுடைய தந்தையை போன்று நானும் கசப்பான சில விடயங்களை செய்ய வேண்டி வரலாம்!
Next articleகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 964 பேர் அடையாளம்