போராட்டத்தை பொலிஸார் பலவந்தமான முறையில் அடக்குவது ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமானது

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடுதழுவிய ரீதியில் பொது மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை பொலிஸார் பலவந்தமான முறையில் அடக்குவது ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமானது என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொது மக்களின் கோரிக்கை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். பிரச்சினை இருப்பதாலேயே மக்கள் வீதிக்கிறங்கியுள்ளார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அபயராம விகாரையில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துது் தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தை கருத்திற் கொண்டு போராட்டம், ஒன்று கூடல் ஆகியவற்றுக்கு மறு அறிவித்தல் விடுக்கும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி போராட்டத்தில் ஈடுப்பட்டாலும் பொலிஸார் அதனை கலவரமாக மாற்றி விடுகிறார்கள். போராட்டகாரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையிலான முரண்பாடுகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

அத்துாடு போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பொலிஸார் பலவந்தமான முறையில் அடக்குவது ஜனநாயக கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது.

மேலும் நாட்டின் ஊடகத்துறை மற்றும், ஜனநாய உரிமை குறித்து சர்வதேம் கூர்மையாக அவதானித்துள்ள வேளையில் இவ்வாறான செயற்படுகளும் இடம் பெறுவது நாட்டை மேலும் பலவீனப்படுத்தும்.

அத்தோடு ஜனநாயக கொள்கைக்கு முரணான செயற்பாடுகளில் ஈடுப்படுவதை அரசாங்கமும், பொலிஸாரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். வீதிக்கிறங்கி போராடும் மக்களின் போராட்டம் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் பொருளாதார ரீதியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை நாட்டு மக்களுக்க உண்டு. பிரச்சினை உள்ள காரணத்தினாலேயே மக்கள் வீதிக்கிறங்கி போராடுகிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous articleநவாலி படுகொலை நினைவேந்தல்- பெருமளவான பொலிஸார் குவிப்பு!
Next articleடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு