யாழில் தமையனின் காதை கடித்து பதம்பார்த்த தம்பி!

தென்மராட்சி-நாவற்குழிப் பகுதியில் அண்ணன்-தம்பி இடையே இடம்பெற்ற மோதலில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

நாவற்குழிப் பகுதியில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியதில் அண்ணனின் காதை தம்பியார் கடித்து காயப்படுத்தியுள்ளார்.

கம்பியில் சிறுவனை கட்டிப்போட்டு நடந்த கொடூரம்

இதனால் கோபமடைந்த அண்ணன் அருகில் இருந்த தராசினை தூக்கி தம்பியின் தலையினைப் பதம் பார்த்திருந்தார்.

தலை மற்றும் காதுப் பகுதியில் படுகாயமடைந்த 32 மற்றும் 37 வயதான சகோதரர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Previous articleடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
Next articleமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை நயன்தாராவின் தந்தை