நீங்கள் 8 மணி நேரத்திற்கு மேல் தூங்குபவரா? இந்த பாதிப்புக்கள் எல்லாம் எளிதில் வந்து சேர்ந்து விடுமாம்

ஒரு மனிதனுக்கு சராசரியாக 7 முதல் 8 மணி நேர தூக்கமே போதுமானதாகும்.

இந்த அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ நமக்கு பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றது.

அந்தவகையில் 8 மணி நேரத்திற்கு மேல் தூங்குவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று இங்கு பார்ப்போம்.

  • 8 மணி நேரத்திற்கு மேல் தூங்கினால் முதலில் பாதிக்கப்படுவது உடல் எடை தான். அதிக தூக்கம் உடல் எடையை அபரிமிதமாக அதிகரித்து விட கூடும்.
  • நீண்ட நேரம் தூங்குவதால் மிக குறைந்த காலத்திலே இதய நோய்கள் வந்து விடுகின்றது.
  • அதிக நேரம் தூங்குவதால் மூளையின் திறன் குறைய தொடங்கும். மேலும், ஞாபக திறனும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து விடும். புத்தி கூர்மையையும் இதனால் பாதிக்கப்படும்.
  • 8 மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்களுக்கு நிச்சயம் தலைவலி பிரச்சினை உண்டாக கூடும். அதிக நேரம் தூங்குவதால் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு பலவித பிரச்சினைகள் உண்டாகும்.
  • 8 மணி நேரத்திற்கு மேல் தூங்குவோருக்கு சர்க்கரை நோயின் தாக்கம் இருக்கலாம் என சொல்லப்படுகின்றது. இதனால் ஹார்மோன் பாதிப்பும் ஏற்படும். உங்களின் தூக்கம்படி படியாக உறுப்புகளையும் ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்று விடும்.
  • 8 மணி நேரத்திற்கு மேல் தூங்கினால் மன அழுத்தம் அதிகரிக்க கூடும். இதனால் பலவித உளவியல் சார்ந்த பிரச்சினைகள் உங்களுக்கு ஏற்படும்.