கிளிநொச்சியில் தாக்குதல் நடத்த வந்த ரவுடிகளை புரட்டி எடுத்த இளைஞர்கள்!

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் வீடு ஒன்றிற்கு தாக்குதல் மேற்கொள்ள பெப்பர் ஸ்பிரே, இரும்புக்கம்பிகள் சகிதம் வந்த ரவுடிகள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தாக்குதல் மேற்கொள்ளும் முகமாக நேற்றய தினம் நள்ளிரவு வேளை 6 மோட்டார் சைக்கிள்களில் வந்த ரவுடி கும்பல்களை உள்ளுர் மக்கள் விரட்டி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதனை எதிர்பார்க்காத ரவுடிகள் வாகனங்களை கைவிட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரியவருகின்றது.

கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Previous articleநீங்கள் 8 மணி நேரத்திற்கு மேல் தூங்குபவரா? இந்த பாதிப்புக்கள் எல்லாம் எளிதில் வந்து சேர்ந்து விடுமாம்
Next articleகிளிநொச்சியில் உயிரை காவு கொண்ட சட்ட விரோத மணல் அகழ்வு!