வவுனியா பொதுச் சந்தையில் 112 பேருக்கு இன்று கொவிட் பரிசோதனை!

வவுனியா பொதுச் சந்தையில் 112 பேருக்கு இன்று சுகாதாரப் பிரிவினரால் பி.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பொதுச் சந்தையில் கடந்த வாரம் சிலருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அந்தப் பகுதியிலுள்ள சில வர்த்தக நிலையங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.

இந்தநிலையில், இன்றைய தினம் பி.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

பரிசோதனை முடிவுகளின் பின்னர், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Previous articleயாழில் நடந்த கோர விபத்தில் இரு பெண்கள் படுகாயம்!
Next articleவவுனியா நகர் முழுவதும் எரிபொருள், பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க கோரி சுவரொட்டிகள்!!