பங்களாதேஷில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தொன்றில் 52 பேர் பலி!

பங்களாதேஷில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தொன்றில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள 6 மாடி குளிர்பான தொழிற்சாலையொன்றிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளுது.

தீ விபத்து இடம்பெற்ற தொழிற்சாலையில், இரசாயனப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்கள் இருந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தீயையடுத்து குறித்த தொழிற்சாலையின் ஊழியர்களில் 44 பேர் காணாமல்போயுள்ளதாகவும் அவர்களை தேடும் நடவடிக்கையில் மீட்புப் பணியினர் ஈடுபட்டுள்ளனர்.

தீயை கட்டுப்படுத்த 18 தீயணைப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தீயை பூரணமாக கட்டுப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்றுவருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Previous articleகாணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடியலைந்த மற்றுமொரு தந்தை மரணம்!
Next articleதாயிடமிருந்து பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டு கொலை!