தாயிடமிருந்து பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டு கொலை!

கனடாவின் வின்னிபெக்கில் மர்ம நபர் ஒருவர் குழந்தை ஒன்றை தன் தாயிடமிருந்து கத்திமுனையில் கடத்தி கொலை செய்துள்ளார். அதன்பின்னர், குழந்தையைக் கடத்தியவர் வேறு யாருமல்ல என்றும் , அந்த குழந்தையின் சொந்த தந்தைதான் என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புருண்டி என்ற கிழக்கு ஆப்பிரிக்க நாட்டிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த Frank Nausigimana (28), தன் சொந்த மகளான Jemimahவை (3) அவளது தாயிடமிருந்தே கடத்தி, கத்தியால் குத்தி கோரமாக கொலை செய்துள்ளார்.

தற்போது அழகே உருவான குழந்தை Jemimahவின் புகைப்படங்களும், அவளை ஈவிரக்கமின்றிக் கொன்ற அவளது தந்தையான Frank இன் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், Frank ஏற்கனவே ஒரு முறை தன் மனைவியை தாக்கியதாகவும், அவரது வயிற்றிலிருந்த கருவைக் கலைக்க முயன்றதாகவும், அதற்காக கைது செய்யப்பட்டபோது, Frank தான் செய்த தவறுக்காக கொஞ்சமும் வருத்தப்படவில்லை என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் Frank-ம் அவரது காதலியும் சில காலம் சேர்ந்து வாழ்ந்த நிலையில் பின்னர் பிரிந்துவிட்டதாகவும், சம்பவம் நடப்பதற்கு முன் பல மாதங்களாக இருவரும் தொடர்பில் இல்லாமல் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள Frankக்கு 25 ஆண்டுகளுக்கு ஜாமீனில் வர இயலாத வகையில், ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என கருதப்படுகிறது.

Previous articleபங்களாதேஷில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தொன்றில் 52 பேர் பலி!
Next articleதடுப்பூசி போடாதவர்கள் கனடாவுக்குள் நுழைய அனுமதி இல்லை!