தடுப்பூசி போடாதவர்கள் கனடாவுக்குள் நுழைய அனுமதி இல்லை!

கொரோனா தடுப்பூசி போடாத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் பாதிக்கப்படுவதை அரசாங்கம் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடிமக்களுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை கனடா நீக்கியுள்ளது.

எனினும், சுற்றுலாத் துறையின் அழுத்தங்கள் இருந்தபோதிலும் அத்தியாவசியமற்ற வெளிநாட்டு பயணிகள் நுழைவதற்கு இன்னும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட சர்வதேச பயணிகளை அனுமதிக்க முடியுமா என்பதை பார்ப்போம்.” என்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) மேலும் தெரிவித்துள்ளார்.

Previous articleதாயிடமிருந்து பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டு கொலை!
Next articleநவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்