நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

​கொஸ்கொட பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் கொஸ்கொட, துவே மோதர கங்கையில் நீச்சல் பழகிய போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது, ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா மற்றும் அவரின் பேரன்களான 6 வயதுடைய இரட்டை குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்படையின் சுழியோடிகளால் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

Previous articleஇன்றும் கனமழைக்கு வாய்ப்பு!
Next articleயாழ் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு