இணையத்தில் வைரலாகும் வெள்ளைப் புலி!

அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள ஷாலோம் வனவிலங்கு சரணாலயத்தில் வளர்க்கப்பட்டு வரும் வெள்ளை புலி ஒன்றின் காணொளி நெட்டிசன்கள் புருவத்தை உயர்த்தியது என்று சொல்லாம்.

இந்த காணொளி கட்டாயம் அந்த வெள்ளை புலியை நேரில் சென்று பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் அளவுக்கு கம்பீரமாக தோற்றமளித்துள்ளது.

அந்த சரணாலயத்தில் வசிக்கும் ஜிஞ்சர் என்ற வெள்ளை புலி உள்ளது. ஜிஞ்சர் ஒரு பாறையின் மேல் அமர்ந்திருப்பதை அந்த பதிவு காட்டுகிறது.

காணொளி முழுவதும், அழகான பெரிய பூனை தனது கம்பீரமான தோற்றத்தில் அமர்ந்திருக்கிறது. அந்த காணொளிகள் பகிர்ந்ததோடு அதில் “எங்கள் அழகான பெண்,” என்று தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 27 அன்று பகிரப்பட்ட இந்த வீடியோ கிளிப் 23,000 க்கும் மேற்பட்ட ஷேர்ஸ்களையும் 3.2 லட்சத்திற்கும் அதிகமான ரியாக்சன்களையும் பெற்றுள்ளது.

சிலர் புலியின் அழகைக் கண்டு மயங்கியதாக கமெண்ட் செய்திருந்தனர். மற்றவர்கள் வீடியோவை பார்த்து GIF மூலம் தங்கள் விருப்பத்தை பகிர்ந்து கொண்டனர்.

ஜிஞ்சர் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை வர்ணிக்கமுடியவில்லை என்று பலர் குறிப்பிட்டுள்ளனர்.