சுவிட்சர்லாந்துக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் தலைநகர் பெர்ன் மற்றும் சில ஆல்பைன் பிராந்திய ஏரிகளில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை மாலை மத்திய சுவிட்சர்லாந்திலும் பலத்த புயல் தாக்கியதை தொடர்ந்து சுமார் 30 வீடுகளைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சுற்றுச் சூழலுக்கான பெடரல் அலுவலகம் வெள்ள அபாய எச்சரிக்கை அளவு மூன்றாக கணித்துள்ளது.

இதனால் ஆல்பைன் பிராந்தியத்தில் உள்ள துன், பிரையன்ஸ் மற்றும் லூசெர்ன் எரிகள், சூரிச் ஏரி அபாய கட்டத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அது மட்டுமின்றி வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சுவிட்சர்லாந்தில் புதன்கிழமை முதல் வெள்ளி வரை மிக அதிக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.