மாங்குளம் பகுதியில் காணாமல் போன மாணவன் வீடு திரும்பினார்!

மாங்குளம் துணுக்காய் வீதியில் உதயசூரியன் நகர் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் விதுசன் 14 வயது மாங்குளம் மகா வித்தியாலய மாணவன் கடந்த 10.07.21 இரவு முதல் காணாமல் பேயிருந்த நிலையில் இவர் 11.07.21 அன்று மாலை வீடு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து மாணவன் கருத்து தெரிவிக்கையில்

தான் குளிக்க சென்றவேளை யாரோ தன்னை கூப்பிட்டது போல இருந்ததாகவும் நான் காட்டிற்குள் சென்று விட்டேன் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது அதன் பின்னர் கொக்காவில் காட்டுப்பகுதியில் வெளியேறினேன் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது எவ்வாறு காட்டிற்குள் சென்றேன் என்றும் தெரியாது என்றும் மாணவன் தெரிவித்துள்ளான்.

மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாட்டினை நீக்கி வாய்முறைப்பாட்டின் பின்னர் குறித்த மாணவன் வீட்டிற்கு சென்றுள்ளான்.

குறித்த காட்டுப்பகுதியில் காட்டு பேய் இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து புதன்கிழமை முதல் ஆரம்பம்!
Next articleசெல்ஃபி மோகத்தால் 11 பேர் பலி!