செல்ஃபி மோகத்தால் 11 பேர் பலி!

இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூர் நகரில் மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

மழை பெய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அமர் கோட்டையிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்தின் மேலே ஏறி செல்ஃபி எடுக்க முற்பட்ட வேளையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் மணிக்கூட்டுக் கோபுரத்தின் மீது 27 பேர் இருந்ததாகவும் அவர்களில் பலர் கீழே பாய்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன்போது உயிரிழந்தவர்களில் அதிகமானோர் இளைஞர்கள் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவுள்ளதாக மாநிலத்தின் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக மின்னல் தாக்கி சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது

Previous articleமாங்குளம் பகுதியில் காணாமல் போன மாணவன் வீடு திரும்பினார்!
Next articleயாழ். காங்கேசன்துறையில் 344 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!