தடுப்பூசிகள் முடிவடைந்து விட்டதாக கூறி திருப்பி அனுப்பப்பட்ட மன்னார் மக்கள்!

எனினும் இன்றைய (12) தினம் காலை ஏழு மணி முதல் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி மற்றும் சென் சேவியர் பெண்கள் கல்லூரியில் நீண்ட நேரம் வரிசையில் மக்கள் நின்றுள்ளனர்.

ஆனால் தடுப்பூசிகள் முடிவடைந்து விட்டதாக கூறி திருப்பி அனுப்பப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் அவர்களிடம் வினவிய போது,

“மன்னார் மாவட்டத்திற்கு என வழங்கப்பட்ட 20 ஆயிரம் பைசர் கொரோனா தடுப்பூசிகளில் உயிலங்குளம் மற்றும் முருங்கன் பகுதிகளில் உள்ள வயோதிபர்களுக்கு வழங்கவே சுமார் 300 தடுப்பூசிகள் மிகுதி உள்ளது. ஏனையவை முடிவடைந்து விட்டது.

மேலும் 20 ஆயிரம் ‘கொரோனா’ தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

குறித்த தடுப்பூசிகள் கிடைத்தவுடன் விடுபட்ட 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வழங்கப்படும்” என்றார்.

Previous articleயாழில் ஒன்லைனில் லெக்பீஸ் ஓடர் செய்தவருக்கு கிடைத்தது!
Next articleஒகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை!