கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 577பேர் பாதிப்பு- 2பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 577பேர் பாதிக்கப்பட்டதோடு 2பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 21ஆயிரத்து 108பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 438பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்தாயிரத்து 152பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 321பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 13இலட்சத்து 89ஆயிரத்து 518பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Previous article10 பேருடன் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று!
Next articleஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் உள்ள ஒரு கப்பலில் எண்ணெய் கசிவு!