கொரோனா சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் பலி!

ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் கொரோனா சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஒக்சிஜன் தாங்கி வெடித்ததால் இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

மூன்று மாதங்களுக்குள் ஈராக்கில் கொரோனா சிகிச்சை பிரிவொன்றில் இடம்பெற்ற இரண்டாவது தீ விபத்து இதுவாகும்.

நேற்று (12) இரவு ஏற்பட்ட இந்த தீப்பரவல் தீயணைப்பு வீரர்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் இந்த அனர்த்தத்தில் சிகிச்சை அறையில் சிக்குண்டுள்ள நோயாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் பெக்டேட் நகரில் உள்ள கொவிட் சிகிச்சை மையமொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 80 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.