பூமியைத் தாக்கும் சூரிய புயல்!

சூரிய புயல், இன்று அல்லது நாளை பூமியைத் தாக்குவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக நாசாவை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தப் புயலால், உலகின் தொலைபேசி மற்றும் ஜி.பி.எஸ் உள்ளிட்ட பல தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட புயலானது சுமார் ஒரு மில்லியன் வேகத்தில் வீசுவதாகவும், 1.6 மில்லியன் வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

அடுத்தடுத்த நிலைகளில் சூரியப் புயலின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், சூரியப் புயல் குறித்து வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுமாறு வேண்டியுள்ளனர்.