பேர்னில் பாரிய வெள்ள ஆபத்து எச்சரிக்கை!

பேர்ன் கான்டனில் பாரிய வெள்ளம் அபாய நிலைமை உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூறாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தை விடவும் மோசமான வெள்ள நிலைமை உருவாகும் சாத்தியம் காணப்படுவதாகத் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேர்ன் கான்டனின் முக்கிய ஏரிகளான Thun, Biel ஆகியனவற்றின் நீர் மட்டம் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு உயர்வடைந்துள்ளது. இந்த இரண்டு ஏரிகளினதும் வெள்ள எல்லையை விடவும் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆறுகளின் நீரோட்டம் ஒரு செக்கனுக்கு 500 முதல் 560 கியூபிக் மீற்றராக அமையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வியாழன், வெள்ளிக் கிழமைகளில் மழை வீழ்ச்சி 100 மில்லிமீற்றர் அளவினை விடவும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Advertisement