கனடாவில் ஏராளமான தேவாலயங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதுடன், சிவப்பு வண்ணம் பூசப்பட்டு சேதம்!

கனடாவில் ஏராளமான தேவாலயங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதுடன், சிவப்பு வண்ணம் பூசப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.

கனடாவில் தொடர்ந்து கத்தோலிக்க தேவாலயங்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பள்ளிகளில் பயின்ற பூர்வக்குடியின குழந்தைகள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட விடயம் வெளியாகி வருவதைத் தொடர்ந்தே தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டுவருகின்றன. ஜூன் மாதம் துவங்கி, இதுவரை சுமார் 45 தீவைப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.

உண்டுறை பள்ளிகளின் அருகில் சுமார் 1,000 குழந்தைகளின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே மக்களின் கோபம் தேவாலயங்களை நோக்கி திரும்பியுள்ளது.

சில தொண்டு நிறுவனங்கள், கல்லறைகளைத் தோண்டாமல், ராடார் உதவியுடன் கனடாவின் பல்வேறு பகுதிகளில் தேடத்துவங்கியதைத் தொடர்ந்து, ஆங்காங்கே நூற்றுக்கணக்கில் குழந்தைகள் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

பூர்வக்குடியின குழந்தைகள் வலுக்கட்டாயமாக தங்கள் குடும்பங்களிடமிருந்து பிரிக்கப்பட்டு, தங்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் கைவிட்டு ஆங்கிலம் கற்க கட்டாயப்படுத்தப்பட்டதுடன், அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்கள். துஷ்பிரயோகம் செய்யப்பட்டும், நோய்களுக்கு ஆளாகியும் உயிரிழந்த குழந்தைகளை அவர்களது பெற்றோருக்கு கூட தெரிவிக்காமல் ஆங்காங்கே பள்ளிகளின் அருகே கூட்டம் கூட்டமாக புதைத்துள்ளார்கள்.

ஆகவே மக்களின் கோபம் வெடிக்க, அவர்கள் தேவாலயங்களை சேதப்படுத்தியுள்ளார்கள். ஆனால், இதுவரை யாரும் இது தொடர்பாக கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.