இன்று முதல் மேலும் பல கட்டுப்பாடுகள் தளர்வு

இலங்கையில் அமுலாக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளில் சிலவற்றை தளர்த்தும் நோக்கில் தற்போது புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலாகும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி சிறுவர் பூங்காக்கள், விலங்குகள் சரணாலயங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், மிருககாட்சிசாலைகளை பார்வையிட ஒரு தடவையில் 25 வீதமானவர்களுக்கே அனுமதியளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளக இசைநிகழ்ச்சிகளை மண்டப கொள்ளளவில் 50 சதவீத பார்வையாளர்களுடன் நடாத்தவும் புதிய சுகாதார வழிகாட்டியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.எனினும் திறந்த வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.

5,000 ம் இருக்கை கொண்ட அரங்குகளில் 2500 பேர்களுக்கு அனுமதி.

மேலும், 50 வீதமானோரின் பங்குப்பற்றுதலுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, வழிப்பாட்டு தலங்களை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டல்கள் வெவ்வேறாக வழங்கப்பட்டுள்ளது.