தீபாவளி ரேஸில் இணையும் அஜித்தின் வலிமை!

தீபாவளி பண்டிகையில் பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாவதன் மூலம் ரசிகர்களை அதிக அளவு தியேட்டர்களுக்கு இழுக்கவும் ஓ.டி.டி. தளங்கள் எழுச்சியை கட்டுப்படுத்தவும் முடியும் என்று தியேட்டர் அதிபர்கள் நம்புகிறார்கள். ஏற்கனவே தீபாவளி பண்டிகையில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் திரைக்கு வருவதை படக்குழுவினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் அஜித்குமாரின் வலிமை படமும் தீபாவளிக்கு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதனால் இப்படத்தின் அடுத்த அப்டேட்டாக ரிலீஸ் தேதி வரலாம் என்று எதிர்பார்க்கின்றனர்.

ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் படங்கள் வெளியாகி இரண்டுமே நல்ல வசூல் பார்த்தன. அதுபோல் வருகிற தீபாவளி பண்டிகையிலும் இரு படங்களும் மோதுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Advertisement