சிறுவர்களின் பாதுகாப்பிற்கு இணையம் பாரிய அச்சுறுத்தல்!

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இணையம் ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவர் துஷ்பிரயோகம், அவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சிறுவர்கள் மீது சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேலும் அவமானம் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு செய்ய மூன்றில் ஒருபகுதியினர் முன்வருவதில்லை என குறிப்பிட்டார்.

யூடியூப், வைபர், வாட்ஸ்அப், ஐஎம்ஓ, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக வலைத் தளங்கள் 2முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு சமூகத்தில் ஒரு முக்கிய அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.