யாழ்.போதனா வைத்தியசாலையில் 4 மாத குழந்தை திடீர் உயிரிழப்பு

காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

முழங்காவில் – குமுழமுனை கிராமத்தை சேர்ந்த ரஞ்சீவன் தனுசியன் என்ற 4 மாத குழுந்தையே உயிரிழந்துள்ளது.

கடந்த 18ம் திகதி குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றிருக்கின்றனர்.

Advertisement

பின்னர் நேற்றுமுன்தினம் மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில், முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்றைய தினம் உயிரிழந்துள்ளது.