யாழ்.சாவகச்சோி பிரதேச செயலர் பிரிவில் மேலும் ஒரு அலகு முடக்கம்!

யாழ்.சாவகச்சோி பிரதேச செயலர் பிரிவில் மேலும் ஒரு அலகு முடக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தொிவித்திருக்கின்றனர்.

பிரதேச செயலகத்தின் வெளிக்கள அலுவலர்களுக்கான அலகே முடக்கப்பட்டுள்ளது. குறித்த அலகில் பணியாற்றிய பெண் உத்தியோகஸ்த்தருக்கு

கடந்த ஞாயிற்று கிழமை காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில்

Advertisement

தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து சுகாதார பிரிவின் அறிவுறுத்தலின் பிரகாரம் குறித்த அலகு மூடப்பட்டுள்ளது.