மீண்டும் உருவாகும் ஆடைத்தொழிற்சாலை கொத்தணி? தொற்று உறுதியான 120 பேரில் பலருக்கு டெல்டா தொற்று?

பிலியந்தலை, ஜம்புரலிய – லுல்லவில வீதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் 186 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைகளில் 120 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இவற்றில் எழுமாறாக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாதிரிகள், ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 6 பேரின் மாதிரிகளில் டெல்டா கொவிட் திரிபு கண்டறியப்பட்டுள்ளது.

மேற்படி தொழிற்சாலையில் 1000க்கும் மேற்பட்டோர் பணியாற்றிவருவதாகவும், அவர்களில் 85 % மானோர் தொழிற்சாலையை அண்மித்த பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement