5,000 ரூபாய் கொடுப்பனவில் முறைகேடு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக அந்தந்த பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் பின்னர் இந்த விடயம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அலுவலகத்தின் கணக்காய்வாளர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட தொகைக்கு அதிகமான பணம், இந்த நிவாரணத் திட்டத்தினூடாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Advertisement

எனவே, இழக்கப்பட்ட பணத்தை மீள பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரைகளும் தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் பிரதேச செயலகங்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.