படம் எடுக்கும்போது குளத்தில் தவறி விழுந்த நடிகை!

இறுதிச்சுற்று புகழ் ரித்திகா புகைப்படம் எடுக்கும்போது குளத்தில் தவறி விழுந்த விடியோ காட்சிகளை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இறுதிச்சுற்று ஆண்டவன் கட்டளை ஓ மை கடவுளே படங்களின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் ரித்திகா. இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து, ரசிகர்களை பெரிதும் மகிழ்வித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் புகைப்பட படப்பிடிப்பிற்கு கோயில் குளம் ஒன்றில் நின்று கொண்டிருக்கிறார். அப்போது தெரியாமல் தவறி விழுந்து விட்டார். இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

Advertisement