நேற்று அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டனர்!

நேற்றைய தினம் (21) இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகி உள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய ​கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 291 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி இருந்தனர்.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 228 தொற்றாளர்களும், களுத்துறையில் 227 பேரும் மற்றும் இரத்தினபுரியில் 173 பேரும் தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.

Advertisement

அதனடிப்படையில் நேற்றைய தினம் நாட்டில் மொத்தமாக 1,554 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் தொற்றுக்கு உள்ளானவர்களுள் 43 பேர் வௌிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.