டயகம சிறுமிக்கு நீதிவேண்டி மட்டக்களப்பில் பறை மேளம் அடித்து ஆர்ப்பாட்டம்

ரிஷாட் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டு உயிரிழந்த டயகம சிறுமியான ஹிலினிக்கு நீதிவேண்டி பறைமேளம் அடித்து வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள வீதி சமிக்கை விளக்கு பகுதியில் கண்டன கனவயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு வீட்டு வேலை தொழிலாளர் சங்த்தின் தலைவி சத்தியவாணி சரசகோபால் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் வீட்டு வேலை தொழிலாளர்கள் பலர் இந்த கவனயீர்பு ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு மேளம் கொட்டியவாறு ஊர்வலமாக வீதி சமிக்கை விளக்கு பகுதியிலுள்ள பிரதான வீதியில் வீட்டு வேலை தொழிலாளர் உரிமைகளுக்கு சட்டம் வேண்டும், வேலைத்தளத்தில் பாதுகாப்பு வேண்டும்.

சட்டத்திற்கு முரணாக சிறுமியை வேலைக்கு அமர்த்தியதற்கு எதிராவும், சிறுமியை சித்திரவதைக்கு உட்படுத்தியதற்கு எதிராகவும், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமைக்கு எதிராகவும், சிறுமியின் உயிரிழப்புக்கு எதிராகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Advertisement

சிறுமி பாலியல் துஷ்பிரயோக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை பாரிய குற்ற செயலாகும் என வாசகங்கள் எழுதப்பட்ட சுலொகங்களுடன் காலை 10.30 மணி தொடக்கம் 11.30 மணிவரை சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.