யாழ் இந்திய துணைதுாதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன்!

யாழ்.இந்திய துணை துாதரக அதிகாரியாக ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக இருந்த பாலச்சந்திரன், சுரினாம் குடியரசு நாட்டுக்கும் அதனோடு இணைந்து மூன்று நாடுகளுக்குமான

இந்தியத் தூதுவராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், கண்டியிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றிவரும் நிலையில் விரைவில் யாழ்ப்பாணத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.