ரொறன்ரோவில் 31 பகுதிகளில் புதிதாக பாதிப்பில்லை!

Blood sample with COVID-19 Coronavirus chinese infection of the Canada with test in medical exam laboratory

ரொறன்ரோவில் கொரோனா தொற்றுக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட Thorncliffe Park உட்பட 31 பகுதிகளில் புதிதாக எவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்ற மகிழ்வான தகவல் வெளியாகியுள்ளது.

ரொறன்ரோவில் கொரோனாவல் கடுமையாக பாதிக்கப்பட்ட Thorncliffe Park பகுதியில் கடந்த மூன்று வாரங்களாக புதிதாக எவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் பட்ட துயரத்திற்கும், முன்னெடுத்த சுகாதார முயற்சிகளுக்கும் கிடைத்த பலன் என்றே அப்பகுதி நிர்வாகிகள் தரப்பு தெரிவிக்கின்றனர்.

Advertisement

Thorncliffe Park பகுதியில் தகுதியான மொத்த மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதே அடுத்த இலக்கு எனவும் தெரிவிக்கின்றனர்.

மேலும், ரொறன்ரோவில் Thorncliffe Park பகுதி உட்பட மொத்தம் 31 பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என வெளியான தரவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.