ஏரிக்குள் தத்தளித்த மகனை காப்பாற்றியவருக்கு நேர்ந்த துயரம்!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏரியில் மூழ்கி உயிருக்கு போராடிய ஆட்டிசம் பாதித்த மகனை காப்பாற்றிய தந்தை ஒருவர் அதே ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் வெளியாகியுள்ளது.

Chehalis ஏரியில் சனிக்கிழமை குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர் 53 வயதான Arnulf Salazar என்பவர். மதியம் உணவருந்திய பின்னர் அனைவரும் தண்ணீர்ல் விளையாடி உள்ளனர்.

அப்போது 10 வயதேயான Zack தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடுவதை தந்தையான Arnulf Salazar கவனித்துள்ளார். ஆட்டிசம் பாதித்த சிறுவன் தற்செயலாக ஆழத்தில் சென்றுள்ளான்.

இந்த நிலையில் துரிதமாக செயல்பட்ட Arnulf Salazar மகனை காப்பாற்றி, சிறுவனை மீட்க வந்த இன்னொருவரிடம் கரை சேர்க்க அனுப்பியுள்ளார்.

ஆனால் துரதிஷ்டவசமாக சுழலில் சிக்கி, அவர் ஆழத்தில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். மட்டுமின்றி கடும் குளிரான தண்ணீரில் 20 முதல் 50 அடி ஆழத்தில் சுமார் 20 நிமிடங்கள் வரை சிக்கியுள்ளார்.

பலர் அவரை மீட்க தண்ணீரில் குதித்துள்ளனர். ஆனால் இருள் சூழ்ந்த நிலையிலும், வெகு ஆழத்தில் அவர் இழுத்து செல்லப்பட்டதாலும் பொதுமக்களால் எதுவும் செய்ய முடியாமல் போயுள்ளது.

இதனிடையே, நீச்சல் தெரிந்த ஒருவர் துணிச்சலுடன் ஆழத்தில் சென்று அவரை மீட்டு கரையில் சேர்த்துள்ளார். ஆனால், அவரை உயிருடன் மீட்க முடியவைல்லை என்றே குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பேசிய அவரது மகள் Zsalve Salazar, எனது தந்தை துணிச்சல் மிகுந்தவர், அவர் ஒரு ஹீரோ என்றே எங்கள் குடும்பத்தில் அறியப்படுவார் என்றார்.