யாழ் சித்தன்கேணியில் கொரோனா விதிமுறைகளை மீறி ஒன்றுகூடும் மக்கள்!

யாழ் சித்தன்கேணியில் கொரோனா விதிமுறைகளை மீறி ஒன்றுகூடும் மக்கள். நாளை சனிக்கிழமை (24) சித்தன்கேணி வைரவர் கோயிலில் (சித்தன்கேணி -பண்டத்தரிப்பு வீதியில் சித்தன்கேணி சந்திக்கு அருகில்)ஆடுகள் வெட்டி சரிக்கப்படவுள்ள நிலையில் அதிகளவான மக்கள் முகக்கவசம் இன்றியும் சமூக இடைவெளி இன்றியும் ஆடுகள் வளர்க்கப்படும் வீடுகளில் ஒன்று கூடிக்கொண்டிருக்கிறார்கள்.வெடிச்சத்தங்களால் அப்பகுதி அதிர்கிறது.அதிகளவு ஒலியுடன் பாடல்களை ஒலிக்கவிட்டு மக்களை ஒன்றுகூடுவதற்கு மறைமுகமாக அழைக்கிறார்கள். எங்கே போனார்கள் சுகாதாரத் தரப்பும் பாதுகாப்புத் தரப்பினரும்.

Advertisement